அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் பேச்சு!

keerthi pandian speech

நடிகர் அசோக் செல்வன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கீர்த்தி பாண்டியன் ” இந்த மாதிரி ஒரு நல்ல படத்தில் நடித்ததை நினைத்து நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். பா.ரஞ்சித் அண்ணா தயாரிப்பில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி.

ராஷ்மிகாவின் ‘Deep Fake’ வீடியோ விவகாரத்தில் ஒருவர் கைது!

பா.ரஞ்சித் அண்ணா பெயர் வந்தாலே அரசியல் பேச ஆரம்பிச்சுட்டீங்களா எனக் கேட்கின்றனர். என்னுடைய கேள்வி எண்னென்றால், அப்படி பேசுனா என்ன தப்பு?
நாம் அணியும் உடை மற்றும் சாப்பிடும் சாப்பாடு, குடிக்கும் தண்ணீர் என எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அதைப்பற்றி பேசாவிட்டால், அது இல்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. நீங்கள் அதை தவிர்க்கிறீர்கள் என அர்த்தம்.

இன்று இந்த இசை வெளியீட்டு விழா நடப்பது ஒரு முக்கியமான நாளில். அரக்கோணம் ஸ்டைல் பாடலில் அறிவு எழுதிய வரிகளை குறிப்பிட விரும்புகிறேன். ‘காலு மேல கால போடு ராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே'” என பேசி தனது உரையை முடித்துக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்