சினிமாவை விட்டு காணாமல் போன கௌசல்யா! காரணத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

kausalya

தமிழ் சினிமாவில் “காலமெல்லாம் காதல் வாழ்க” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், பிரியமுதன், ஆசையில் ஒரு கடிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். முன்னணி நடிகையாக வளம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சினிமாவை விட்டே கௌசல்யா காணமல் போய்விட்டார்.

சினிமாவில் திரைப்படங்களில் மட்டுமின்றி நடிகை கௌசல்யா பல வெற்றி சீரியல்களை நடித்திருக்கிறார்.  கடைசியாக நடிகை கௌசல்யா கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ராதா கிருஷ்ணன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு  பிறகு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.

இதன் காரணமாக இப்போது சினிமாவை விட்டு விட்டு கௌசல்யா  பெங்களூரில் வசித்து வருகிறாராம். கௌசல்யா  மார்க்கெட் போய் பட வாய்ப்புகள் வராமல் இருந்ததற்கான காரணமே அவர் உடலை சரியாக கவனிக்காமல் விட்டது தானம். பொதுவாகவே நடிகைகள் எல்லாம் நடிக்க வந்து அடுத்தடுத்த சில ஆண்டுகளில் உடல் எடையை அதிகரிக்க செய்துவிடுவார்கள்.

ஆனால், நடிகை கௌசல்யா  அப்படியே நடிக்க வந்த சமயத்தில் எவ்வளவு உடல் எடையை வைத்திருந்தாரோ அதைப்போல தான் வைத்திருந்தார். இதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் தங்களுடைய படங்களில் கௌசல்யாவை நடிக்க வைக்க அந்த சமயம் யோசனை செய்தார்களாம். இதன் காரணமாக தான் பட வாய்ப்புக்கள் அவருக்கு வரவில்லையாம். பிறகு கௌசல்யா  அப்படியா சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், 43 வயதாகும் கௌசல்யா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். திருமணம் எதற்காக செய்யவில்லை என்ற கேள்வியை அவரிடம் கேட்டால் அதற்கு எனக்கு இப்போது பாதுகாப்பு தேவையில் எப்போது எனக்கு அப்படி தோன்றுகிறதோ நான் அப்போது திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியுள்ளதாகவும் பயில்வான் ரங்கநாதன்  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்