சமீபத்தில், ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. தற்போது பாலிவுட் நடிகை கஜோலின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், டிரெஸ்ஸிங் ரூமில் ஆடை மாற்றும் இளம்பெண் முகத்தில் கஜோலின் முகத்தை பொருத்தி வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல சமூக ஊடக பயனர்கள் அந்த வீடியோ போலியானது AI டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினர்.
இதற்கிடையில், நடிகை ராஷ்மிகா வேதனையுடன் இனிமேல் இது போன்று யாருக்கும் நடக்கவே கூடாது தொழில் நுட்பம் மிகவும் ஆபத்தமாக மாறி வருகிறது என்று தெரிவித்திருந்தார். இதற்கு திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஏற்கனவே, நடிகை ரஸ்மிகாவின் வீடியோவை வெளியிட்ட நபர் யார் என்று கண்டறியவில்லை.
நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது என்றால, சாதாரண மக்களை இவ்வாறு எடிட் செயது பரப்ப எவ்வளவு நேரம் ஆகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ராஷ்மிகாவை தொடர்ந்து புகைப்பட சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை!
இதனையடுத்து, நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் அது போன்ற வீடியோவை வெளியீட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், Deep fake தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்தது தொடர்பாக, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளி யாரென கண்டறிந்து அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஷ்மிகா போலி வீடியோ சர்ச்சை: 3 ஆண்டுகள் சிறை.! மத்திய அரசு எச்சரிக்கை.!
ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, இந்த மாதிரி போலி வீடியோவை வெளியிட்டவர் மீது நிச்சியமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், உடனடியாக இந்த விவகாரத்தை பற்றி டெல்லி காவல்துறையினர் விசாரணையை நடத்தவேண்டும் என்றும் இன்று (நவம்பர் 17 ஆம் தேத) இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களுடன் எஃப்ஐஆர் நகலை வழங்குமாறும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் காவல்துறைக்கு கோரிக்கை வைத்து நோட்டிஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…