எம்மாடியோ…நடிகை காஜல் அகர்வால் சொத்து மதிப்பு இவ்வளவா?
கஜால் அகர்வால் : நடிகை கஜால் அகர்வாலின் சொத்துமதிப்பு குறித்த விவரம் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவை சேர்ந்த பிரபலங்களுடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் அடிக்கடி வெளியாவது உண்டு. அப்படி தான் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாமட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழும் காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு 1.5 கோடியில் இருந்து 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அது மட்டுமின்றி, சொந்தமாக மும்பையில் ரூ.6 கோடி மதிப்பில் காஜல் அகர்வாலுக்கு பிரமாண்ட பங்களா ஒன்றும் இருக்கிறதாம்.
அது மட்டுமின்றி, கார்களுக்கு பஞ்சம் இல்லை என்கிற வகையில், காஜல் அகர்வால் விலையுயர்ந்த கார்களான ரேஞ்ச் ரோவர், ஸ்கோடா ஆக்டேவியா, ஆடி ஏ4, உள்ளிட்ட கார்களையும் வீட்டில் வைத்துள்ளார். அதைப்போல, திருமணம் முடிந்த கையோடு நடிகை காஜல் அகர்வால்சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருந்தார். அதன் மூலமும் அவருக்கு வருமானம் வரும்.
இதன் அடிப்படையில் தான் நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காஜல் அகர்வாலின் சொத்துமதிப்பு 90 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் எம்மாடி இவ்வளவு சொத்தா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும், நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிட்ச்லு என்பவரை கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. திருமணம் முடிந்த சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த காஜல் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில், தற்போது ஹிந்தியில், உமா என்ற படத்திலும், தெலுங்கில் கண்ணப்பா என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.