உடல் ரீதியாக ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.! அந்த சம்பவத்தால் நொந்து போன காஜல் அகர்வால்.!

Kajal Aggarwal

தமிழ் திரையுலகில் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான், கடந்த 1996ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’. மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரது நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் பாட்டையைக் கிளப்பியது.

இதைத்தொடர்ந்து, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. அதன்படி, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க்கும் இப்படத்திற்கு இசையமையாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படத்திற்காக தான் உடல் ரீதியாக நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக, தீபாவளியையொட்டி நடிகர் ராணாவுடன் நடந்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் பேசிய காஜல், “எனக்கு பிரசவம் முடிந்த மூன்று மாதத்திற்குள் நடிப்பதற்காக வந்துவிட்டேன். இந்தியன் 2 படத்திற்கு வித்தியாசமான சண்டை காட்சிகள் தேவை என்பதால் நான் களரி தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டேன்.” என்றார்.

மேலும், “அதேபோல மற்றொரு படத்திற்காக குதிரை சவாரியும் செய்தேன். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்தேன். அது எனக்கு உடல் ரீதியாக மிகவும் கஷ்டமாக இருந்தது. நிறைய உடல் வலிகளை சந்தித்தேன். இருந்தும் இதனை முழுமையாக கற்றுக்கொண்டேன். அதன் பிறகு எனக்கு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
RIP Manoj
TN GOVT
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja