செம…25 வருடங்களுக்கு பிறகு ‘பாலிவுட்டில்’ என்ட்ரி கொடுக்கும் நடிகை ஜோதிகா.!.!
விகாஸ் பாஹ்ல் இயக்கும் த்ரில்லர் படத்தில் அஜய் தேவ்கன், ஆர் மாதவன் ஆகியோருடன் நடிகை ஜோதிகா இணைந்துள்ளார்.
25 ஆண்டுகளுக்குபின் மீண்டும் ஜோதிகா இந்தி சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார். மாதவன், அஜய்தேவ்கன் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த திரைபடத்தை ‘க்யூன்’ பட இயக்குநர் விகாஸ்பாஹ்லின் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மும்பை, முசோரி மற்றும் லண்டனில் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.
JYOTIKA JOINS AJAY DEVGN – R MADHAVAN FOR SUPERNATURAL THRILLER… #Jyotika returns to #Hindi films after two decades, will share screen space with #AjayDevgn and #RMadhavan in #PanoramaStudios’ supernatural thriller, directed by #VikasBahl… The film – not titled yet – will go on… pic.twitter.com/O5mjMis7ZH
— taran adarsh (@taran_adarsh) May 15, 2023
முன்னதாக படத்தில் மாதவன் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜோதிகா படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. . இதனால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழுலும் அதிகரித்துள்ளது.
மேலும், நடிகை ஜோதிகா தற்போது மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக காதல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.