தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம்வந்த த்ரிஷா, நயன்தாரா மற்றும் ஜோதிகா ஆகியோர் முன்னனி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தங்களை சிறந்த நடிகைகளாக நிலைநிறுத்தி கொண்டனர். இதில், ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சிறுது ஓய்வெடுத்து கொண்டார்.
தற்போது, ஜோதிகா 13 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்கிறார். மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் காதல் – தி கோர் என்ற திரைப்படம் நவம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ப்ரோமஷன் பணியின் போது, தனது சினிமா கேரியர் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில், ஜோதிகா சமீபத்தில் பிரபல ஊடக ஒன்றிக்கு அளித்த பேட்டியில், “17 வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டதால், எனக்கு அப்போது சினிமா குறித்த புரிதல் அப்படிதான் இருந்தது. சினிமாவில் நுழைந்த தொடக்கத்தில், என்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் சம்பாதிக்கவும் முக்கிய ஹீரோக்களின் படங்களில் பணிபுரிவதில் கவனம் செலுத்தினேன்.
ஓரினச்சேர்க்கை கதை… மம்முட்டி – ஜோதிகாவின் புதிய படத்திற்கு தடை!
பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பதன் மூலம் விரைவில் நாமும் பிரபலமாகலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனால், நான் வளர்ந்து பிறகு, ஒரு பெண்ணாக, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் நான் புரிந்து கொள்ள தொடங்கினேன்.
சந்திரமுகி படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது இவரா? சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்!
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் பற்றிய தனது உணர்வை வெளிப்படுத்திய ஜோதிகா, தமிழ் சினிமாவில் இத்தகைய கதாபாத்திரங்கள் பற்றாக்குறையாக இருப்பதைக் குறிப்பிட்டு, பெண்கள் தொடர்பான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினேன் என்றார்.
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…