படப்பிடிப்பின் போது காலை முறித்து கொண்ட நடிகை!
தமிழ் சினிமாவில் பஞ்சமுகி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகை அனுஷ்கா.இவர் தமிழில் மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் தெலுங்கில் பிரணமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் சுதந்திர பின்னணி கொண்ட வரலாற்று படமான சைரா படத்தில் சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அனுஷ்கா நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டு வந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக அனுஷ்கா கீழே விழுந்ததில் கால் முறிந்தது.
காயத்தை பரிசோத்தித்த மருத்துவர் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை.இருந்தாலும் இரண்டு நாட்கள் வீட்டில் ரெஸ்ட் எடுப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
இதனால் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க உள்ளார்.