தமிழ் சினிமாவில், அம்மா கதாபாத்திரம் அக்கா, தங்கை கதாபாத்திரம் என இதைபோல் முக்கியமான குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கீதா. இவர் நடித்த குருதிப்புனல், சிவகாசி, சந்தோஷ் சுப்ரமணியன், ஆகிய படங்கள் இன்றுவரை ரசிகர்ளுடைய பேவரைட் திரைப்படமாக இருக்கிறது என்றே கூறலாம்.
இந்த நிலையில், ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை கீதா அப்படியே ஆன்மீகத்தில் இறங்கிவிட்டதாக நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நடிகை கீதா பாலசந்தர் மூலம் அறிமுகமானவர். அவர் ஒரு அருமையான நடிகை. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், நடிகை கீதாவின் தோற்றம் ஒரு முதிர்கனியாக இருக்கும். ஒரே ஒரு படத்தில் நடிகர் ரஹ்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதன் பிறகு பல படங்களில் அம்மா, தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கிய உடன் நடிகை கீதா ஆன்மிகத்தில் ஈடுபட்டுவிட்டார்.
தமிழ்நாட்டில் எந்த இடத்தில் புராண கோவில் இருக்குதோ அந்த கோவிலுக்கு சென்று தங்கி ஒரு 3 நாட்களாகவாது தங்கி ஆன்மிகவாதியாக மாறி கீதா வாழ்ந்துகொண்டு இருக்கிறார். நான் சமீபத்தில் கீதாவை காஞ்சிபுரத்தில் பார்த்தேன். அவரை பார்க்கும்போது கிட்டத்தட்ட ஒரு பெண் சாமியாரை பார்ப்பது போல இருந்தது. அப்படி மாறி ஒரு பெண் சாமியாராகவே கீதா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த கீதா இப்போது பெரிதாக படங்களில் பார்க்க முடியவில்லை. நன்றாக நடிக்க தெரிந்த இதைப்போன்ற நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என பலரும் சோகத்துடன் கூறிவருகிறார்கள். மேலும் நடிகை கீதா கடைசியாக தமிழில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான மத்தாப்பூ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…