ஆஸ்கர் விருதுகள் வழங்குபவர்கள் பட்டியலில் நடிகை தீபிகா படுகோன்.!
ஆஸ்கார் விருதுகள் 2023: 95வது அகாடமி விருதுகளில் தொகுப்பாளராக எமிலி பிளண்ட், டுவைன் ஜான்சன் ஆகியோருடன் தீபிகா படுகோன் இணைந்துள்ளார்.
95வது அகாடமி விருதுகள் மார்ச் 12ம் தேதி (இந்தியாவில் மார்ச் 13) லாஸ் ஏஞ்சல்ஸ் டோலி தியேட்டரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விருதுவிழாவில் பல இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். பலருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், ஆஸ்கர் நிறுவனம் 95-வது ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனை அவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
View this post on Instagram
தீபிகாடுகோனுடன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டான், ரிஸ் அகமது ஆகிய பிரபலங்களின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடுவர்களில் ஒருவராகவும் தீபிகா படுகோன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.