அட்ஜஸ்ட்மென்ட் பண்ணலனா படம் குடுக்க மாட்டாங்க! ஷர்மிளா ஓபன் டாக்!

charmila

சினிமாவில் இப்போது நடிகைகள் எல்லாம் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட்  பற்றி வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். குறிப்பாக பிக் பாஸ் பிரபலங்கள் விசித்ரா, ஷகீலா இருவரும் பேசியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த ஷர்மிளா அட்ஜஸ்ட்மென்ட் பண்ணலனா படம் குடுக்க மாட்டாங்க என கூறியுள்ளார்.

அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! உண்மையை உடைத்த ஷகீலா!

இது குறித்து பேசிய அவர் ” என்னிடம் யாரும் கண்டிப்பா அட்ஜஸ்ட்மென்ட் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தி கேட்கவில்லை. கையை பிடித்துவிட்டு என்கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும் என்று யாரும் கேட்டது இல்லை. வார்த்தையாக அவர்களுக்கு விருப்பம் இருக்கும் அதனை வைத்து கேட்பார்கள். அதில் உங்களுக்கு விருப்பம் இருக்கா? இல்லையா? என்று கேட்பார்கள்.

அப்படி நாம் அந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்திற்கு ஒற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் நமக்கு கிடைக்காமல் போய்விடும். அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஒரு இயக்குனர் நம்மளிடம் கேட்கிறார் என்றால் ஒண்ணுமே சொல்ல முடியாது அட்ஜஸ்ட்மென்ட்க்கு விருப்பம் இல்லை என்றால் படத்தில் இருந்து விலகவேண்டும்.

மற்றபடி எனக்கு பெரிய அளவில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் எல்லாம் சந்தித்தது இல்லை ஏனென்றால், நான் நடிக்க நுழைந்த ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரே குழுவுடன் தான் இணைந்து வேலை செய்து வந்தேன். எனவே, அவர்கள் என்னுடைய குடும்பம் போல இருப்பவர்கள். இதனால் பெரிதாக எனக்கு இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் வந்தது இல்லை” எனவும் நடிகை ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

இன்னும் அட்ஜஸ்ட்மென்ட் தொடருதா? நடிகை யாஷிகா ஆனந்த் சொன்ன பதில்!

மேலும், இதைப்போல நடிகை ஷகீலா ஒரு பேட்டியில் ” கடந்த காலங்களில் நானும் இங்கு பல சிரமங்களை எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில் அல்லரி நரேஷின் தந்தை, மறைந்த இயக்குனர் ஈவிவி சத்யநாராயணா என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார். அவருடன் அட்ஜஸ்ட் செய்தால் அந்த படம் மட்டுமின்றி அடுத்ததாக மற்றோரு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் சொன்னார்கள். நான் அவரிடமே சொன்னேன் சார் இப்ப இந்த படத்தில் நடிக்க பணம் கொடுத்திருக்காங்க. இன்னொரு பட வாய்ப்பு எனக்கு வேண்டாம் என்று கூறியதாக” தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்