ரசிகர்களை புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த நடிகை!

ரசிகர்களை புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த நடிகை பாவனா.
பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உள்பட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
இன்று பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரில், இணையபக்கங்களில் போலியான கணக்குகள் தொடங்குவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், குஷ்பூ, சோபனா, அனுபமா, சுவாதி போன்ற நடிகைகளின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகையான பாவனாவின் பெயரிலும் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ளனர். நான் முகநூலில் இணையவில்லை. எனவே, ரசிகர்கள் எனது போலி கணக்கை பின்தொடர வேண்டாம். இந்த போலி கணக்கு குறித்து புகார் அளியுங்கள் என தெரிவித்துள்ளார். இவரது வேண்டுகோளுக்கு இணங்க ரசிகர்களும் புகார் அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
April 27, 2025