நடிகை அனுஷ்கா சினிமா துறையில் நுழைந்த குறுகிய காலத்திலே மக்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் அனுஷ்கா. இவர் தமிழ் சினிமாவில் அஜித், ரஜினி, விஜய், என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு காலத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். பிறகு உடல் எடை அதிகரித்த காரணத்தினால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கி விட்டது என்று சொல்ல வேண்டும்.
பாகுபலி படத்திற்கு பெரிய அளவில் பெயர் சொல்லும் அளவிற்கு படங்களில் நடிக்க அனுஷ்காவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனாலே தனது உடல் எடையை மீண்டும் குறைத்து பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று நடிகை அனுஷ்கா முடிவெடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க அனுஷ்கா தற்போது தனது பழைய பார்முலாவை கையில் எடுத்துள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஓவியா! உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய பயில்வான் ரங்கநாதன்?
அது என்னவென்றால் நடிகை அனுஷ்கா ஆரம்ப காலத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். தற்போதும் அந்த பார்முலாவை தற்போது மீண்டும் எடுத்துள்ளாராம். அதன்படி, ஜாகர்லமுடி ராதாகி ருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தற்போது அனுஷ்கா நடித்து வருகிறார்.
பத்து வருடங்களுக்கு முன்பு ஒடிசாவில் பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் சாதாரண பெண்ணாக நடித்து வருகிறாராம். சமீபத்தில் ஒடிசாவில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியும் இருந்தது.
இதற்கிடையில் இந்த படத்திற்கு ‘சீலாவதி’ என டைட்டில் வைக்க படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு காம்பேக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் தனது பழைய பார்முலாவை அனுஷ்கா கையில் எடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…
சென்னை : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.…
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப்…
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை…
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்…
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத…