இணையத்தில் நடிகை அனுஷ்கா தன் ரசிகர்களுக்கு அளித்த தகவல்!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் நடிகை அனுஷ்கா.இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிவரும் சைரா படத்தில் நடித்துவருகிறார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை அனுஷ்காவிற்கு கால் முறிந்து விட்டது என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.இதற்கு அனுஷ்கா மறுப்பு தெரிவிக்கும் வகையில் எனக்கு ஒன்னும் இல்லை நான் நலமாக இருக்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/BzM-mlknJhn/?utm_source=ig_web_copy_link