தமிழ் சினிமாவில் விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன். இந்த இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் இன்னுமே மக்களுக்கு மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். இவர் இப்படி புகைப்படங்களை வெளியிட்டதன் காரணமாகவே இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது என்றே சொல்லலாம்.
குறிப்பாக மலையாளத்தில் “ஓ மை டார்லிங்” படத்தில் கூட நடிகை அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சிகள் கூட பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டது. இருந்தாலும் இவருக்கு கிடைத்து வரும் பட வாய்ப்புகள் மட்டும் இன்னும் குறையவே இல்லை என்றே சொல்லலாம். தற்போது வாசுவின் கார்பினிகல் ,Vr07 ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
ரூம் போட்டு அதை பண்றீங்களா? ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!
இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து தற்போது அனிகாவுக்கு தமிழில் பெரிய ஜாக்பார்ட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால், தனுஷ் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு தான். தனுஷ் தற்போது D50 படத்தை இயக்கி முடித்து இருக்கும் நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அந்த திரைப்படத்தில் ஹீரோவாக தனுஷின் அக்கா மகன் தான் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தான் தற்போது நடிகை அனிகாவுக்கு வாய்ப்பு வந்து இருக்கிறதாம். படத்தின் கதையை கேட்டுவிட்டு படத்தில் நடிக்க அனிகா சம்மதமும் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி அனிகா நல்ல படங்களை தேர்வு செய்ய நடித்து வர காரணமே அவருடைய அம்மா தானாம். ஏனென்றால், “ஓ மை டார்லிங்” படத்தால் அனிகா மீது விமர்சனங்கள் எழுந்தது.
எனவே, அவருடைய தயார் உள்ளே இறங்கி அனிகாவுக்கு வரும் பட வாய்ப்புகளின் கதையை கேட்டு அதில் எந்த கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தேர்வு செய்து கொடுத்தாராம். அது மட்டுமின்றி இது போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் தான் நடிக்கவேண்டும் என்று அட்வைஸ் செய்தாராம். அவர் கொடுக்கும் அட்வைஸ் வைத்து தான்தற்போது அனிகா கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…