தயாரிப்பாளராக மாறிய நடிகை அமலாபால்
“ஒரு போலீஸ் சார்ஜன்டே ஓர்ம குறிப்புகள்” என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவாகி வரும் படம் “கேடவர்” இப்படத்தை அமலாபால் தயாரிக்கிறார்.
“மைனா”திரைப்படத்தின் மூலமாக பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். தற்போது இவர் காதல் படங்களில் நடிப்பதை விட்டு விட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் “ஆடை” படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தின் அரைகுறை ஆடையில் ரத்த காயங்களுடன் இருப்பது போல வெளியான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் “அதோ அந்த பறவைபோல” , “ஆடுஜீவிதம்” ஆகிய திரைப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.இந்த 3 படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. தற்போது அமலாபால் புதிதாக தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.
“ஒரு போலீஸ் சார்ஜன்டே ஓர்ம குறிப்புகள்” என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவாகி வரும் படம் “கடவர்” இப்படத்தை அமலாபால் தயாரிக்கிறார்.
இப்படத்தில் நோய் குணங்களை ஆராயும் வல்லுனர் கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். அமலாபால் தயாரிக்கும் முதல் படம் “கேடவர்” என்பது குறிப்பிடத்தக்கது.