காதலில் விழுந்த நடிகை அமலா பால்! பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு சொன்ன ஸ்விட் நியூஸ்!

amalapaul and love

நடிகை அமலா பால் தனது நீண்டநாள் காதலர் ஜெகத் தேசாய் என்பவரை  திருமணம் செய்ய உள்ளார். வியாழக்கிழமை (அக்டோபர் 26) தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடும் அமலாபாலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அமலா பாலின் காதலர் ஜெகத் தன்னுடைய காதலை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு அமலா பாலை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கு சிலரை நடனமாட  வைத்து மோதிரம் கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தி அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்தார். இதனை பார்த்து மெய் சிலிர்த்து போன அமலா பாலா உடனடியாக மோதிரத்தை வாங்கி கொண்டு ஜெகத் காதலை ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பான வீடியோவையும் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ” அமலா பால் மற்றும் அவருடைய காதலர் ஒரு ஃபேன்ஸி கஃபேவில் இருக்கிறார்கள். ஜகத் அமலாவை ஒரு சிறப்பு நடன நிகழ்ச்சி மூலம் ஆச்சரியப்படுத்துகிறார். ஒரு சில பின்னணி நடனக் கலைஞர்களுடன் நடனமாடிய பிறகு, ஜகத் அமலாவை மேடைக்கு அழைத்து வருகிறார்.

அழைத்து வந்து மோதிரத்தை கொடுத்து “என்னை திருமணம் செய்து கொள்வீர்களா” என்று அவர் கேட்டவுடன், “ஆம்” என்று சம்மதம் தெரிவிக்கிறார். பிறகு அமலா ஜெகத் இருவரும்  ஒருவரையொருவர்கட்டியணைத்து கொண்டு  முத்தமிட்டு கொள்கிறார்கள்” தன்னுடைய காதலனை அமலா பால் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆடையே இல்லாமல் நடிச்சாச்சு…இதெல்லாம் ஒரு விஷயமா..? ‘லிப் லாக்’ காட்சி குறித்து அமலா பால்.!!

கடந்த சில நாட்களாகவே நடிகை அமலா பாலுக்கு திருமணம் என்ற ஒரு தகவல் பரவி கொண்டிருந்த நிலையில், தற்போது, தன்னுடைய காதலனை அமலா பால் அறிவித்துள்ள காரணத்தால் அமலா பால் திருமணம் உறுதியாகியுள்ளது. விரைவில் திருமண தேதியை அமலா பால் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  ஜகத் அடிக்கடி அமலாவுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டிருப்பதை அனைவரும் பார்த்திருப்போம் இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது காதல் ஜோடிகளாக மாறியுள்ளனர்.

மேலும், நடிகை அமலா பால் இதற்கு முன்பு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இருப்பினும், அவர்கள் 2016 இல் பிரிந்தனர் மற்றும் பிப்ரவரி 2017 இல் நீதிமன்றத்தால் விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi