aishwarya rajesh [File Image]
இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் சமீபத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் மக்கள் பலரும் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, ஐஸ்வர்யாதத்தா உள்ளிட்ட பிரபலங்களை அமைச்சர் ஜீவன் அழைத்து இருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, ஐஸ்வர்யாதத்தா ஆகியோரும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்கள். விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அமைச்சர் ஜீவனை புகழ்ந்து பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ” முதலில் என்னை இந்த விழாவிற்கு அழைக்கும்போது பொங்கல் விழா இப்படி தான் இருக்கும் என்று நினைத்தேன்.
நான் நினைத்தது போலே அப்டியே இந்த பொங்கல் கொண்டாட்டம் இருந்தது. அமைச்சர் என்று சொன்னவுடன் நான் நினைத்தேன் வயதானவராக இருப்பார் என்று ஆனால், வயது அவருக்கு மிகவும் குறைவு அவ்வளவு அழகாகா இருக்கிறார். உலகத்திலே இவ்வளவு குறைவான வயதில் ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார் என்றால் இது தான் முதல் முறை.
பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம்! சாய் பல்லவி நடனம்..வைரலாகும் புகைப்படங்கள் வீடியோக்கள்!
அமைச்சராக ஜீவன் பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். கிராமத்தில் வீடு கட்டிக்கொடுப்பது, பெண்களின் படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்வது என செய்து கொடுத்து வருகிறார். அவருடைய உதவி மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இந்த மாதிரி ஒரு இளமையான அமைச்சர் எங்களுடைய ஊரில் இல்லையே…ஜீவன் கண்டிப்பாக நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நான் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற உதவிகளை மேலும் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் அமைச்சர் ஜீவனை பாராட்டி பேசியுள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…