நடிகர் சங்க செயற்குழு ஜனவரி- 20ம் தேதி கூடுகிறது….!!! முக்கிய முடிவுகளை எடுக்க திட்டம்….!!!
ஜனவரி-20ம் தேதி நடிகர் சங்க சேர்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி வருவதால் அதனை முடித்துவிட்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது நடிகர் சங்கக் கட்டிடமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும், இது தொடர்பாக விவாதிக்க நடிகர் சங்க செயற்குழு ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள், அதற்கான செலவுகள், தேர்தல் எப்போது நடத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை விவாதிக்க உள்ளனர். மே அல்லது ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.