உயிருக்காக உதவிகோரும் ஜோதிகா..தனுஷ் பட துணை நடிகை..!!!!
நடிகை ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடித்தவர் நடிகை சேது லட்சுமி இந்நிலையில் மலையாளத்தில் ஹிட்டான ஹ வோல்டு ஆர் யூ படத்தின் ரிமேக் தான் 36 வயதினேலே அதில் நடித்த சேது லட்சுமி தமிழிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மலையாளத்தில் சின்னத்திரையின் நாடக நடிகையான இவர் இந்த படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானர்.மேலும் நடிகர் தனுஷுடன் மாரி 2 படத்திலும் நடித்து உள்ளாராம். சினிமா, டிவியில் காமெடி ஷோ,சீரியல் என வலம் வந்த அவரை தற்போது சோகம் சூழ்ந்துள்ளது. நடிகை சேதுலட்சுமியின் மகனுக்கு உடல்நிலை சரியில்லையாம் அவருடைய 2 கிட்னிகளும் பாதிப்பு ஏற்பட்டு செயலழிந்துவிட்டதாம்.
இதனால் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பல லட்சங்கள் செலவாகும் என்று தெரிகிறது. தான் நடித்து சம்பாதிக்கும் பணம் மகனின் மருத்துவ செலவுக்கே சரியாகி விடுகிறது யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும்.என் மகனின் உயிரை காப்பாற்றுங்கள் என சேது லட்சுமி கதறி அழுதுள்ளார்.