பிரபல நடிகர் உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு!மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கும்பல்!
- பிரபல நடிகரும் நடன கலைஞருமான ராகவா லாரன்ஸ் தன்னை கடுமையாக திட்டிய கும்பலுக்கு ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
- அதில் தன்னையும் தன் குடும்பத்தையும் திட்டியவர்கள் நன்றாக இருக்குமாறு கடவுளிடம் வேண்டுவதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே சிறந்த நடிகராக திகழ்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆவார்.இவர் நடிப்பு ,நடனம் ,பாடகர்,தயாரிப்பாளர் மற்றுமில்லாமல் நேர்மையான சேவையாளராகவும் விளங்கி வருகிறார்.
மேலும் இவர் சூப்பர் ஸ்டாரின் சிறந்த ரசிகராகவும் உள்ளார்.இந்நிலையில் அரசியல் பிரமுகர் சீமான் தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வருவதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தர்பார் பட விழாவில் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் ஆதரவாளர்கள் இவரை தவறான வார்த்தைகளில் விமர்சித்துள்ளனர்.தற்போது அவரின் குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் நாம் எல்லாம்உருவத்தில் தான் வெவ்வேறு உள்ளத்தால் ஒன்றுதான் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் திட்டியவர்கள் குடுப்பத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதாக கூறியுள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) December 15, 2019