Rajinikanth - Kamalhassan [File Image]
நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பும், நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் நிலையில், பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர். இருவரும் சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, பாபா மற்றும் பஞ்சதந்திரம் படப்பிடிப்பின் போது இருவரும் சந்தித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களான இரு நட்சத்திரங்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி சில நிமிடங்கள் பேசிக்கொண்டு, நீண்ட ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற படப்பிடிப்பை நினைவு கூர்ந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி ஹிட் கொடுத்த டி. செ. ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
தலைவர் 170 அப்டேட்! அசத்தல் லுக்கில் ரஜினிகாந்த்…இணையத்தை அதிர வைத்த புகைப்படம்!
இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்ஷன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ”இந்தியன் 2” திரைப்படம், தமிழ் சினிமாவில் இன்னும் வெளியாகாமல் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படங்களில் ஒன்று. இந்த படத்தினுடைய முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
உலக நாயகன் பிறந்தநாளை முன்னிட்டு ‘இந்தியன் 2’ திரைப்பட போஸ்டர் வெளியீடு!
இந்த இரண்டாவது பாகத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருக்கிறர்கள். படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசையமையாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…