நடிகர் சங்க தேர்தல் நாட்டிற்கு மிகவும் தேவையான தேர்தல்! கிண்டலாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அனைத்து நடிகை நடிகர்களும், மிகவும் உற்சாகமாக வாக்களித்துள்ள நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்து, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நடிகர் சங்க தேர்தல் நாட்டிற்கு மிகவும் தேவையான தேர்தல் என்றும், இதன் மூலம் நதிகள் இணைக்கப்படும் என்றும், விவசாயிகளின் பிரச்னை தீர்க்கப்படும் என்றும், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.