நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம்!
விஷால் நலமுடன் உள்ளார் என்று அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கை நடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் கொடுத்திருக்கிறார். விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி,விஷால் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் வலி மற்றும் சற்று சோர்வாக காணப்படுகிறார். ஓரிரு நாட்களில் விஷால் முழுமையாக குணமடைந்து விடுவார். 2 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு ‘துப்பறிவாளன் 2’ பட வேலைகளில் ஈடுபட உள்ளார்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், விஷால் உடல்நலனுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் சேலம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு 12 வகை சாப்பாடு, சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார பூஜை, விளக்கு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கினர்.
பாசமிகு அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் உடல் நலன் பெறவேண்டி சேலம் மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் மற்றும் சேலம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திருக்கோவிலில் பூஜை மற்றும் அன்னதானம் வழங்கிய போது @VishalKOfficial @VISHAL_SFC @kalakkalcinema @johnsoncinepro pic.twitter.com/WixoFGPnoZ
— Harikrishnan (@HariKr_official) January 7, 2025