நடிகர் விஷாலால் நடிகர் சங்கத்திற்கு எந்த நன்மையையும் இல்லை : நடிகர் உதயா
நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால் தலைமையிலான ஒரு அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா, திருச்சியில் நாடக கலைஞர்களை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலால் நடிகர் சங்கத்துக்கு எந்தவித நன்மையையும் இல்லை என்றும், விஷால் தன்னை விளம்பரப்படுத்துவதற்காகவே செயல்பாட்டுக்கு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.