நடிகர் விஷால் யார் தேவையோ அவர்களை பயன்படுத்தி கொள்கிறார் : ஆர்.கே.சுரேஷ்
நடிகர் ஆர்.கே.சுரேஷ், மஞ்சி திவாகர் இயக்கத்தில், ‘ கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்கு ஆண்டுகள் ஆகிறது என்றும், ஆனால் எந்த பொறுப்புகளிலும் போட்டியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடிகர் சங்க தேர்தலில் விஷாலை தவிர்த்து, மற்ற அனைவருக்கும் எனது ஆதரவு உண்டு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விஷால் மீது ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட ஆளில்லை.
ஆனால், அவர் தனக்கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்தி கொள்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருடன் ரித்திஷ் இருந்தார். பிறகு அவரைவிட்டு பிரிந்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.