நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா? காட்டத்துடன் பேசிய விஷால்!
Vishal : நடிகர் விஷால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பற்றி சற்று கோபத்துடன் பேசியுள்ளார்.
நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஷால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பற்றி கோபமாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய விஷால் ” சினிமாவில் ஒரு வருடைய படத்தை தள்ளி போக சொல்லும் உரிமை யாருக்குமே கிடையாது. சினிமா என்னுடைய கையில் தான் இருக்கிறது என்று ஒருத்தர் நினைத்தாள் அவர் உருப்பட்டதா சரித்திரம் இல்லை. என்னுடைய படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஏசி-யில் அமர்ந்து இருப்பவர் இல்லை. வியர்வை சிந்தி வட்டிக்கு வாங்கி உழைத்த பணத்தை போட்டு படம் எடுப்பவர். நாங்கள் ரத்தம் சிந்தி படம் எடுத்து அதனை கொண்டு வந்தால் தள்ளி போக சொல்லுவீங்களா? இந்த அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தா?
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உள்ள நபர் ஒருவரிடம் நான் நேரடியாகவே கேட்டேன் தமிழ் சினிமாவை நீங்க தான் குத்தகைக்கு எடுத்து இருக்கீர்களா என்று. அந்த நபரை உதயநிதி ஸ்டாலின் கிட்ட பேசி நிறுவனத்தில் சேர்த்துவிட்டதே நான் தான். ஆனால், அந்த நபரே என்னுடைய படத்தை தள்ளி வர சொல்கிறார். இந்த மாதிரி எல்லாம் செய்யும் போதும் சத்தியமாக என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்திற்காக தயாரிப்பாளர் 65 கோடி வரை செலவு செய்து இருந்தார்.அந்த திரைப்படத்தை செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட முடிவும் செய்து இருந்தார். இந்த தேதியில் நீங்க வாங்க என்று அந்த நபர் சொன்னார் இந்த தேதியில் வாங்க என்று சொல்வதற்கு நீங்கள் முதலில் யாரு? ஒரு காசு வெளியில் கடன் வாங்கி படத்தை எடுத்து இருக்கிறார். எப்போது ரிலீஸ் செய்யவேண்டும் என்று அவருக்கு தெரியும்.
நீங்களும் உங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்க நாங்களும் எங்களுடைய படத்தை ரிலீஸ் பண்றோம். எந்த படத்திற்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும். நீங்க மட்டும் ரிலீஸ் செய்து நீங்க மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று எதாவது விதிகள் இருக்கிறதா? ஜாலியா நீங்க ஏசி ரூம்ல அமர்ந்து சம்பாதிக்கிறதை நாங்கள் வேடிக்கை பார்க்கணுமா? நான் சரியான தேதியில் படத்தை இறக்கியதால் தான் மார்க் ஆண்டனி வெற்றிபெற்றது. இப்போது ரத்னம் படத்துக்கும் பிரச்சனை வரும் பரவாயில்லை பார்த்துக்கொள்ளலாம்” எனவும் நடிகர் விஷால் சற்று கோபத்துடன் பேசியுள்ளார்.