நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி வெற்றிநடைபோட்டு கொண்டு இருக்கும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார்.
இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார். அது மட்டுமின்றி படத்தை ரிலீஸ் செய்து ஆகவேண்டும் என்ற காரணத்தால் தான் அந்த பணத்தை கொடுத்துவிட்டதாகவும் இது தொடர்பான வருத்தமான வீடியோ ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.
அதில் இனிமேல் வரும் காலங்களிலாவது இப்படி நடக்கவேண்டாம் தயவு செய்து இந்த விவகாரம் குறித்து விரைவாக நடவேடிக்கை எடுக்கவேண்டும். இதன் காரணமாக தான் இந்த தகவலை மகராஷ்டிரா முதல் அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் எனவும் தெரிவித்து இருந்தார்.
பிறகு, செப்டம்பர் 29-ஆம் தேதி விஷாலின் இந்த புகாருக்கு உடனடியாக பதில் அளித்த மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து இருந்தது. இந்த நிலையில், சிபிஐ விஷால் அளித்த புகாரின் அடிப்படையில், புகார் தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியது.
இந்த விசாரணையில் 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட தனி நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையும் சிபிஐ நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…