நடிகர் விஷால் அளித்த லட்சம் புகார்! அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ!

vishal

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம்  15-ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி வெற்றிநடைபோட்டு கொண்டு இருக்கும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார்.

இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார். அது மட்டுமின்றி படத்தை ரிலீஸ் செய்து  ஆகவேண்டும் என்ற காரணத்தால் தான் அந்த பணத்தை கொடுத்துவிட்டதாகவும்   இது தொடர்பான வருத்தமான வீடியோ ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.

அதில் இனிமேல் வரும் காலங்களிலாவது இப்படி நடக்கவேண்டாம் தயவு செய்து இந்த விவகாரம் குறித்து விரைவாக நடவேடிக்கை எடுக்கவேண்டும்.  இதன் காரணமாக தான் இந்த தகவலை மகராஷ்டிரா முதல் அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் எனவும் தெரிவித்து இருந்தார்.

பிறகு, செப்டம்பர் 29-ஆம் தேதி விஷாலின் இந்த புகாருக்கு உடனடியாக பதில் அளித்த மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து இருந்தது.  இந்த நிலையில், சிபிஐ விஷால் அளித்த புகாரின் அடிப்படையில், புகார் தொடர்பாக சிபிஐ   விசாரணையை தொடங்கியது.

இந்த விசாரணையில் 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும், குற்றம் சாட்டப்பட்ட தனி நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையும்  சிபிஐ  நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்