முதல்ல சாப்பாடு போடுங்க…ரசிகையின் குரலை கேட்டு நடிகர் விஷால் செய்த அந்த செயல்.!
புரட்சி தளபதி விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 34’ திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். இயக்குனர் ஹரியுடன் இது 3வது கூட்டணி ஆகும். தற்காலியமாக ‘விஷால் 34’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிகின்றனர்.
மேலும் இந்த படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது, திருச்சியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நடிகர் விஷாலை சந்தித்தபோது, விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் நலன் குறித்தும் கேட்டறிந்தார்.
Vishal: லைகா விவகாரம்…நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக உத்தரவு – சென்னை உயர் நீதிமன்றம்!
அப்பொழுது, அருகில் நின்று கொண்டிருந்த ரசிகையை சாப்பிட்டீங்களா.? என்று கேட்க அதற்கு அவர் இல்லை, பிறகு பாத்துக்கலாம் என்று கூறினார். முதல்ல சாப்பிடுங்க, மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கல்லாம் என்று கூறியதோடு, தனது மேலாளரிடம் கண்டிப்புடன் நடந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“முதல்ல சாப்பாடு போடுங்க”
தன்னை சந்திக்க விவசாயிகள் சாப்பிடாததை அறிந்து டென்ஷன் ஆன விஷால்#Vishal #Cinema #Shooting #Farmers pic.twitter.com/Zwfme39hbS
— Vignesh Selvaraj (@Cs_Vignesh) November 15, 2023
எப்பொழுதுன், தனது படப்பிடிப்பின் போது அப்பகுதியில் உள்ள மக்களின் நலன் குறித்தும் அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்வதும் வழக்கமாக வைத்துள்ளாராம்.