வில்லனாக களமிறங்கும் நடிகர் விக்ரமின் சகோதரன்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் விக்ரமின் சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர். இவர் இயக்குனர் இருதயாராஜ் இயக்கத்தில் உருவாகும், ‘ எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தில், ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குனர் இருதயராஜ் அவர்கள் கூறுகையில், பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் பாதை தடம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு சரியாக வழிகாட்ட யாரும் இல்லை.
இதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிகம் கவலையடைகின்றனர். இதற்கு ‘ எப்போ கல்யாணம்’ படம் மூலம் தீர்வு காண வழி சொல்லி இருப்பதாக கூறியுள்ளார். மேலும், காதல், சோகம், நகைசுவை படமாக இப்படம் தயாராகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025