ஜூன் 17-ஆம் தேதி மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!
ஜூன் 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக அறிவிப்பு.
இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 17ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த “10 மற்றும் 12-ஆம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வரும் 17-ஆம் தேதி சந்திக்க உள்ளார் நடிகர் விஜய். இதனிடையே, நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பாக ரசிகர்கள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
இதனால், விஜய் விரைவில் அரசியல் வர உள்ளார் என பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில், உலக பட்டினி தினத்தில் அனைவருக்கும் மத்திய உணவு வழங்க விஜய் வலியுறுத்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு வழங்கப்பட்டது. மேலும், சமுதாய தலைவர்கள் பிறந்தநாள் விழாவில் ரசிகர்களை பங்கேற்க செய்து அரசியல் மையப்படுத்துகிறார் விஜய்.
அரசியல் களத்தில் கால்பதிக்கவுள்ள நடிகர் விஜய் தனது நலத்திட்டங்களில் தொகுதியை மையப்படுத்தி அறிக்கை வெளியாகி வருகிறது. தொகுதி வாரியாக மத்திய உணவு, தொகுதி வாரியாக 3 இடங்கள் பிடித்த மாணவர்கள் என தொகுதியை மையப்படுத்தி அறிக்கை வெளியிடப்படுகிறது. எனவே, தொகுதி என்பதை குறிப்பிட்டு அறிக்கைத் தரும் விஜய் அரசியல் களத்திற்கு ஆயுத்தமாவதாக ரசிகர்கள் எதிர்பார்த்துருக்கிறார்கள். இதனால், 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை மையப்படுத்தி வருகிறாரா? விஜய் எனவும் கேள்வி எழுந்துள்ளது.
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
• அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக @TVMIoffl ,
வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள “RK Convention Centre-ல்” 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்… pic.twitter.com/OCc1eiX6UV
— Bussy Anand (@BussyAnand) June 7, 2023