வேலையை முடித்து வீட்டுக்கு சென்ற நடிகர் விஜய்.! கொஞ்ச நாள் ரெஸ்ட் தான்…
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், படத்தின் முக்கிய படப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது.
இந்நிலையில், தனது செட்யூலை முடித்துக்கொண்ட நடிகர் விஜய் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் விஜய் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், கடந்த வாரம் ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விஜய் சந்தித்த புகைப்படம் வைரலானது.
Thalapathy @actorvijay returns to Chennai after completing the 2nd schedule of #Thalapathy66 in Hyderabad pic.twitter.com/oo7fqhich7
— Vijay Fans Trends (@VijayFansTrends) May 23, 2022
குடும்ப படகமாக உருவாகும் ‘தளபதி 66’ படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, யோகி பாபு, ஷாம், ஜெயசுதா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் ரஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தமன் இப்படத்தில் முதன்முறையாக விஜய்க்கு இசையமைக்கிறார்.