Sai BabaTemple: சாய் பாபா கோயிலுக்குச் சென்ற நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரல்.
துபாயில் உள்ள சாய் பாபா கோயிலில், நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘GOAT’ படத்திற்கான படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி கோட் படத்தைத் தயாரிக்கிறார். முன்னதாக, இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது, இப்பொழுது படக்குழு துபாய் சென்றுள்ளது.
இந்த நிலையில், திடீரென அங்குள்ள சாய் பாபா கோயிலுக்குச் சென்ற அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படட்தின் படப்பிடிப்பு ஒரு சில வாரங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் சிங்கிள் அடுத்ததாக வெளியிடப்படும் என்றும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…