நடிகரும், இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனோபாலா, இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
இவருடைய திடீர் மறைவு திரைதுறையில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணிக்கு, வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. இதனையடுத்து அவருடைய உடல் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் விஜய் தற்போது நேரில் சென்று இரங்கலை தெரிவித்துவிட்டு மறைந்த நடிகர் மனோபாலாவின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதல்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…