நடிகர் விஜய் சேதுபதி 2 புலிகளை தத்தெடுத்தார் !!!!!
- நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர்.
- வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி, 2 வங்கப்புலிகளை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர்.இவர் தற்போது ‘சூப்பர்டீலக்ஸ்’படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகைசமந்தா நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் இந்த பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி, 2 வங்கப்புலிகளை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த புலிகளின் பெயர் ஆதித்யா, ஆர்த்தி ஆகும்.
மேலும் இந்த புலிகளுக்கு 6 மாதத்திற்கு தேவையான உணவு தேவைகளுக்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை விஜய் சேதுபதி தற்போது உயிரியல் பூங்காவின் அதிகாரிகளிடம் வழங்கினார்.