ப்ரோ நமக்கு செட் ஆகாது! சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பை நிகாரித்த விஜய்?

Published by
பால முருகன்

Vijay நடிகர் விஜய் தவறவிட்ட பல படங்கள் மற்ற நடிகர்கள் நடித்து மிக்பெரிய சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 2003ம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தை கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்றே சொல்லலாம்.

read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்ததே நடிகர் விஜய் தான். ஆனால், அந்த சமயம் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், காக்க காக்க படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது விஜய் எதற்காக இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

இது குறித்து பேசிய இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் ” முதலில் நான் சூர்யாவிடம் காக்க காக்க படத்தின் கதையை சொல்லவில்லை விஜய், அஜித், விக்ரம் ஆகியோரிடம் தான் சொன்னேன். அவர்கள் எல்லாருமே ஒரு ஒரு காரணம் சொன்னார்கள். விஜய் படத்தின் கதையை கேட்டுவிட்டு எனக்கு இந்த படம் செட் ஆகாது. போலீஸ் கதாபாத்திரம் படம் எப்படி வரும் என்று எனக்கு தெரியவில்லை.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

எனவே, நான் இப்படியான ஒரு காதாபாத்திரத்தில் நடித்தால் செட் ஆகுமா என எனக்கு யோசனையாக இருக்கிறது என்று கூறி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்” என இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்  தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் அவர் சொன்னபடி அவருக்கு செட் ஆகி இருக்குமா என்பது சந்தேகம் தான். சூர்யாவை விட இந்த படத்தில் வேறு யாரும் நடித்து இருக்கா முடியுமா என்கிற அளவுக்கு அவர் மிரட்டலாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

20 minutes ago

நெல்லையில் இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு – 2 பேர் கைது!

திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

58 minutes ago

LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

முடிச்சி விட்டிங்க போங்க.! அந்த சத்தம்… 138 dB… தோனியை முந்திய ‘கிங்’ கோலி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…

2 hours ago

மேட்சை மாற்றிய மிரட்டலான கேட்ச்..! மிரள வைத்த சால்ட் – டிம் டேவிட்.., பெங்களூரு த்ரில் வெற்றி!

மும்பை :  ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…

3 hours ago

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…

3 hours ago