நிதி உதவி வழங்க தயார்.! தனது மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் உறுதி.!
தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் சந்தித்தார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் அதேவேளையில் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கங்களாக மாற்றி தனது ரசிகர் மன்ற நிவாகிகள் உதவியுடன், ரசிகர்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
ஏற்கனவே மக்கள் இயக்கங்கள் சார்பில், விலையில்லா உணவகம் என ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது, குருதியகம் மூலம் இரத்த தானம் செய்வது, விழியாகம் கண்தானம் உள்ளிட்டவை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட நபர்களை விஜய் , தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களை பாராட்டியுள்ளார். மேலும், இம்மாதிரியான நலத்திட்டங்கள் செய்வதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் தருகிறேன் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார் நடிகர் விஜய் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் நின்று கணிசமான அளவில் வெற்றிகளை பெற்று உள்ளாட்சி உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். வெற்றி பெற்றவர்களுடன் விஜய் சந்திப்பு நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.