vetrimaaran - vijay [File Image]
சமீபத்தில், லியோ வெற்றி விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய விஜய், தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார் நடிகர் விஜய்.
இதனையடுத்து, விஜய்யின் அரசியல் பாதை குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர். சமீப, நாட்களாகவே விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிலர், விஜய் அரசியலுக்கு வரலாம் போன்ற ஆதரவான கருத்துக்களை கூறியுள்ளனர்.
அந்த வகையில், இன்று சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த தூய்மை பணியை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெற்றிமாறன், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது. அது முற்றிலும் வரவேற்கத்தக்கது, நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரலாம், முன்னதாக கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அதுதான் அடித்தளமே என்று கூறியதோடு, அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் விஜய் செயல்பட்டு வருகிறார் என்று கூறியது பரபரப்பை ஏற்புத்தியுள்ளது.
கரெக்சன் சொல்லிக்கொண்டே இருந்த தனுஷ்! கடுப்பாகி சந்தானம் கிட்ட கிளம்பிய இயக்குனர்?
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசியலிலும் சமூகத்திலும் சினிமா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, சமீப காலமாக நல்ல விதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சமூகத்தில் நல்லவிதமான உரையாடல்களை சினிமா ஏற்படுத்தியுள்ளது என்று கூறியதோடு, ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியான பிறகு அந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்துள்ளது என்றார்.
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…