தன்னை பார்க்க அடம்பிடித்த குழந்தை….இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ.!
தன்னை பார்க்க அடம்பிடித்த குழந்தைக்கு நடிகர் விஜய் வீடியோ கால் செய்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனவே விஜய்யை பார்ப்பதற்கு பலரும் விருப்பப்படுவதும் உண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த அபிதா பேகம் எனும் குழந்தை ” விஜய் தன்னைப் பார்க்க வருமாறு அடம் பிடித்து பேசி இருந்தார்.
அந்த குழந்தை பேசும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வீடியோவை உடனடியாக விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அக்குழந்தையிடமும் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி குழந்தையின் நலம் விசாரித்தார்.
சற்றுமுன்.!
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை சில நாட்களுக்கு முன்பு தளபதி @actorvijay அவர்களை என்னைப் பார்க்க வருமாறு இணையத்தில் வைரலான வீடியோவை உடனடியாக தளபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அக்குழந்தையிடமும் மற்றும் அவரது… pic.twitter.com/gAkUIlmpQ9
— Bussy Anand (@BussyAnand) March 31, 2023
2 நிமிடத்திற்கு மேல் குழந்தையிடமும் அவருடைய குடும்பத்தினருடனும் பேசியுள்ளார். விஜய் அந்த குழந்தைக்கு வீடியோ கால் செய்ததில் குடும்பமும் அந்த குழந்தையும் சற்று இன்ப அதிர்ச்சியானார்கள். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் “தன்னை நேசிக்கறவங்களை அதைவிட அதிகமாக நேசிப்பவர் தான் அவருடைய குணம். தளபதியின் நல்ல மனம்” என விஜய்யை பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.