விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் 2 வது நாளாக ஆலோசனை..!

Actor Vijay

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் 2வது நாளாக நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அண்மையில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 10, 12வது வகுப்பு மாணவர்களுக்கு உதவி தொகை, சிறப்பு பரிசு வழங்கினார். அதனை தொடர்ந்து தனது பனையூர் மக்கள் இயக்க அலுவலகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 234 தொகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு  வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு நன்றிகளை தெரிவித்தும், நிர்வாகிகளிடம் மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் விஜய் 3 நாட்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன்  ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்ட நிலையில், நாளையும் ஆலோசனை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், வருகின்ற ஜூலை 15ம் தேதி காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச இரவு பாடசாலை திட்டம் துவங்க உள்ளார் எனவும், அதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் மாணவர்கள் பயன்பெற ஏற்பாடு செய்ய உள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்