விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை!

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இரு மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வந்தது. தற்போது, நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் இந்த ஆலோசனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தளபதி விஜய் சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!
சமீபத்தில் கூட, லியோ திரைப்பட வெற்றி விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய விஜய், தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025
அனுபவத்தில் சொல்லுறேன்..ரசிகர்கள் வேற.. வாக்காளர்கள் வேற! ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!
February 22, 2025
“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
February 21, 2025