என்.ஜி.கே படம் குறித்து நடிகர் சூர்யா ட்வீட்!
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், சில எதிர்மறையான கருத்துக்களும் எழுந்தது.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில், ” என்.ஜி.கே திரைப்படம் குறித்த அத்தனை கருத்துக்களையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாக கவனித்து பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.” என பதிவிட்டுள்ளார்.
#NGK திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #NGKinTheatres #கத்துக்கறேன்தலைவரே
— Suriya Sivakumar (@Suriya_offl) June 7, 2019