நடிகர் சூர்யா மிரட்டலா இருக்காரே…வைரலாகும் ‘கங்குவா’ போஸ்டர்கள்.!!

Kanguva Fan Made Posters

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

Kanguva poster
Kanguva poster [Image source : Twitter/
@jayprints_]

இந்த கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். படத்தில் இருந்து சில போஸ்டர்கள் வெளியிடப்பட்டும் இன்னும் சூர்யாவின் முகத்தை காட்டாமல் படக்குழு ட்ரைலரில், அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காமிக்கலாம் என சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.

Kanguva poster
Kanguva poster [Image source : Twitter/
@jayprints_]

இதற்கிடையில், சூர்யாவின் முகம் படத்தில் இப்படி தான் இருக்கும் என கற்பனை செய்து ரசிகர் எடிட் செய்த சில ‘கங்குவா’ படத்தின் போஸ்ட்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர்களை பார்த்த நெட்டிசன்கள் “நம்ம சூர்யா மிரட்டலா இருக்காரே” என கூறி வருகிறார்கள்.

Kanguva poster
Kanguva poster [Image source : Twitter/
@jayprints_]

மேலும் கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியுடன் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்