சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாகும் புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங் பொங்கல் கழித்து மூன்று மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இயக்குனர் பாலா, ஒரு காலத்தில் இவரை கண்டு பயப்படாத நடிகர்கள் கிடையாது. இவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிடமாட்டோமா என எங்கும் நடிகர்கள் ஏராளம். அப்படி இருந்தவர் தற்போது ஒரு பெரிய ஹிட் கொடுத்து கம்பேக் கொடுக்க
போராடி வருகிறார்.
முதலில் அதர்வாவை வைத்து படம் எடுக்க முனைந்தார். அடுத்து சில ஹீரோக்களை ஒன்றிணைத்து படம் எடுக்க நினைத்தார். கடைசியில் சூர்யாவை வைத்து ஒரு பெரிய ஹிட் கொடுக்க அவரிடம் கதை கூறி ஓகே வாங்கி வைத்துள்ளார்.
இந்த படத்தில் சூர்யா நடிக்க சில கண்டிஷன்கள் போட்டு அதனை அக்ரிமெண்ட்டில் எழுதி கையெழுத்து வாங்கிகொண்டுதான் பட ஷூட்டிங்கிற்கே கிளம்ப உள்ளாராம்.
முதலில் பாலா தான் நினைத்த காட்சி வரும் வரையில் எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை என காத்திருந்து எடுப்பார். அப்படித்தான் தாரை தப்பட்டை திரைப்படம் முதலில் எடுக்கப்பட்டு பாலாவுக்கு திருப்தி இல்லாமல், மீண்டும் எடுக்கப்பட்டதாக கூறுவார்கள். படம் பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அந்தமாதிரியான பிரச்சனைகளை மனதில் கொண்டு , தயாரிப்பாளர் சூர்யா (இந்த படத்தை தயாரிப்பதும் சூர்யா தான்) முதலிலேயே 3 மாதத்திற்குள் மொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட வேண்டும் என அக்ரிமெண்ட் எழுதி கையெழுத்தி வாங்கியுள்ளாராம். பொங்கல் கழித்து 3 மாதத்தில் ஷூட்டிங்கை முடித்து அடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் வேலைகளை ஆரம்பிக்க உள்ளாராம் சூர்யா.
ஏற்கனவே படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிட்டது. அடுத்து ஷூட்டிங் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…
சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை…
குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…
சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு…
விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக…