சென்னை: சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யா கடந்த ஆண்டு சென்னையில் இருந்து மும்பைக்கு தனது வீட்டை மாற்றி கொண்டார். ஆம், மும்பையில் ரூ.70 கோடிக்கு மேலாக ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் சூர்யா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியதாக எதிர்ப்பு எழுந்ததால், பாமக-வினர் சார்பில், படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் இந்த விவகாரம் பெரிய அளவில் சென்றதால், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு பாதுகாப்பு அழிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, நிலைமை சரியாகிய பின்பும், நடிகர் சூர்யா மும்பைக்கு சென்றபிறகும், இன்று வரை ஆயுதம் ஏந்திய போலீசார் 4 பேர் தினசரி பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சரின் பரிந்துரையில் தான் இலவசமாக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, சூர்யா குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் நிலையில், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…