சென்னை, பெருங்குடியில் அவரவர் பட ஷூட்டிங் நடைபெற்றபோது நடிகர் சூர்யாவும். விஜயும் சந்தித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருப்பவர்கள் தளபதி விஜயும், சூர்யாவும். இருவரும் திரைக்கு வந்த புதிதில் இருந்தே நல்ல நண்பர்கள். சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தில் இன்னோர் முதன்மை நாயகனாக தளபதி விஜயும் நடித்திருப்பார்.
இருவரும் நேரம் கிடைக்கும் போது சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை, பெருங்குடியில் விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதே வேளையில், சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.
இதனை அறிந்த இருவரும் இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த சந்திப்பின் போது எந்த வித போட்டோக்களும் எடுக்கப்படவில்லையாம். அப்படி எடுத்திருந்தால், அது அவர்களின் கெட்டப் கசிய வாய்ப்பிருக்கிறது என்பதால் எடுக்காமல் விட்டுவிட்டார்களா? அல்லது, போட்டோ எடுத்துவிட்டு, படம் ரிலீஸ் ஆனதும் ரிலீஸ் செய்துவிடலாம் என வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…