மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சூரி…வெளியான சூப்பர் தகவல்.!
காமெடியனாக கலக்கி வரும் நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சூரி அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்து வரும் திரைப்படத்திலும் சூரி காமெடியனாக நடிக்கவில்லை, அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- அஜித் விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான்.! அடித்து கூறும் சினிமா பிரபலம்.!
இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை ‘மதயானைக் கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
தொடர்ந்து காமெடியை தவிர்த்து வரும் சூரி இனி வரும் காலங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.