Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்திக்கொண்டு இருக்கும் நிலையில், சூரி வாக்கு செலுத்த வந்துவிட்டு வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றுள்ளார். அவருடைய பெயர் விடுபட்ட காரணத்தால் அவரால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சூரி செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் வேதனையுடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நடிகர் சூரி ” என்னுடைய ஜனநாயக உரிமையை செலுத்துவதற்கு நான் இங்கு வந்தேன். இதுவரை கடந்த எல்லா தேர்தல்களிலும் நான் என்னுடைய வாக்குளை செலுத்துவதற்கு இங்கு வந்தேன். வந்த எல்லாமுறையும் நான் என்னுடைய வாக்கை செலுத்தினேன். ஆனால், இந்த முறை என்னால் வாக்கு செலுத்தமுடியவில்லை.
என்னுடைய பெயர் இந்த முறை இடம்பெறாமல் விடுபட்டு போச்சு. ஆனால், என்னுடைய மனைவியின் பெயர் இருக்கிறது என்னுடைய பெயர் மட்டும் தான் இல்லை . கேட்டதற்கு என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்று கூறுகிறார்கள். ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக ஆசையுடன் வந்தேன். ஆனால், ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது.
இது எங்கே யாருடைய தவறு எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஒட்டு போட்டு விட்டு அனைவரும் ஒட்டு போடுங்கள் என்று கூறலாம் என நினைத்தேன். ஆனால், இப்போது ஒட்டு போட முடியவில்லையே என்ற வேதனையுடன் கூறுகிறேன் தயவு செய்து அனைவரும் 100% வாக்களியுங்கள்” என சூரி வேதனையுடன் கூறியுள்ளார்.
டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி,…
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக…
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று…
சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக…