பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

'பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்தேன்' என்று நடிகர் சூரி சினிமா வாழ்க்கை பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

actor Soori

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பேன் என்று அண்மைய பேட்டி ஒன்றில் கூறிருக்கிறார். சினிமா வாய்ப்புகளைத் தேடி மதுரையிலிருந்து சென்னை வந்தபோது, ​​பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த சூரி, தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த போது அவரை ஆதரித்து, தனது வீட்டிலேயே கவனித்துக் கொண்டவர் நடிகர் போண்டா மணி.

இப்படி, சினிமாவில் பல்வேறு சிரமங்களைத் தாண்டி வந்த நடிகர் சூரிக்கு தற்போது, மதுரை மற்றும் சென்னையில் மட்டும் சூரிக்கு 2 வீடுகள் உள்ளன. இது தவிர, சென்னையில் பல பகுதிகளில் ரியல் எஸ்டேட்டில் பல கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு ஒரு BMW உட்பட 3 சொகுசு கார்கள் உள்ளன.

இதேபோல், சூரி தனது சொந்த ஊரான மதுரையில் தனது குடும்பத்தினரின் உதவியுடன் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஹோட்டலுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், சூரி மதுரையில் பல கிளைகளைத் தொடங்கி ஹோட்டல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார்.

நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு 1 முதல் 2 கோடி வரை சம்பளம் பெற்று வந்த சூரி, ஹீரோவான பிறகு தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியுள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டு, “சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், அந்த வீடியோ பின்னணியில் அஜித்தின் விடாமுயற்சி பட பாடல் ஒலிக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சூரிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படி அந்த வீடியோவில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், அந்த வீடியோவில் சூரி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் எதிரே புத்தியதாக கட்டப்பட்டிருக்கும் பில்டிங் ஒன்றிற்கு பெயிண்டர் ஒருவர் சுவருக்கு பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார்.

அதனை வீடியோவாக பதிவு செய்த சூரி, தான் சினிமாவுக்கு வருவதற்கு இதே வேலையை பார்த்தது குறித்து நினைவு கூர்ந்த அவர், “சுவர்களை ஓவியம் தீட்டும் ஓவியராக என் வாழ்க்கையைத் தொடங்கினேன் – இன்று, நான் திரையில் உணர்ச்சிகளை வரைகிறேன். நாம் கனவு காணத் துணிந்தால் வாழ்க்கை நகர்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்